தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவு என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளது. இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் தேர்தல் ஆணையம் தற்போது புத்தாண்டு கொண்டாட்டம் என்பதால் அதற்குத் தகுந்தாற்போல் ஒரு விளம்பரத்தை வெளியிட்டு உள்ளது. அதில் புத்தாண்டு பலன் எனப் போட்டு அனைத்து ராசிகளுக்கும் வரும் தமிழ் ஆண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக இருக்கும். ஆனால் அடுத்த 5 ஆண்டுகளும் நல்ல ஆண்டாக இருக்க மே 16 அன்று நடக்கும் தேர்தலில் கட்டாயம் வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என அச்சிட்டுள்ளனர். இதைப் படிக்கு அனைவரும் கட்டாயம் மே 16 என்ற தேதியை நினைவில் நிறுத்திக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. சமீபமாகச் சுப நிகழ்ச்சி பத்திரிகை போல் அச்சடித்து மக்களுக்கு அழைப்பு கொடுத்து தேர்தல் ஆணையம் ஆச்சரியப் படுத்தியது. தற்போது ராசி பலன் வடிவில் வாக்குப்பதிவை வலியுறுத்தியது மக்களைக் கவரும் விதமாக உள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்