• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீக்கிரமே தீர்வு காணப்படும் மகனே’ காஷ்மீர் விவகாரத்தில் அப்ரிடி – கம்பீர் கருத்து மோதல்

August 6, 2019 தண்டோரா குழு

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வீரர் அப்ரிடி எழுப்பிய கேள்விக்கு இந்திய வீரரான கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35A-வை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ், திமுக உட்பட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் காஷ்மீர் தொடர்பான மசோதாக்கள் மீது விவாதம் நடந்தது. அதன்பின் மறுசீரமைப் பதற்காக, காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது. இம்மசோதாவுக்கு ஆதரவாக 125 ஓட்டுகளும், எதிர்ப்பு தெரிவித்து 61 ஓட்டுகளும் விழுந்தன. இதனையடுத்து இம்மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரீடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அப்ரீடியின் இந்த கருத்துக்கு கேலி செய்யும் விதத்தில் ரிப்ளை கொடுத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் இன்னாள் பாஜக எம்.பி-யுமான கவுதம் கம்பீர்.

அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில்,

‘ஐநா அளித்த உறுதியின்படி காஷ்மீருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். சுதந்திர உரிமை என்பது அனைவருக்குமானது. ஐநா ஏன் உருவாக்கப்பட்டது? இப்போது அது ஏன் தூங்குகிறது? தூண்டப்படாத ஆக்கிரமைப்புகளும், குற்றங்களும் காஷ்மீரில் மனிதத்துக்கு எதிராக அரங்கேறுவது கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க பிரதமர் இதில் நடுநிலையாக செயல்பட வேண்டும்’ என பதிவிட்டிருந்தார்.

கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

‘அப்ரிடி கண்டுபிடித்துவிட்டார். அங்கே ஆக்கிரமிப்பு எதுவும் தூண்டப்படவில்லை. இவைஅனைத்தும் குற்றச் செயல்களுக்கு எதிரான மனிதநேய நடவடிக்கை. இதற்காக இவர் இங்கு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை மறந்து இவர் பேசிக் கொண்டிருக்கிறார். கவலைப்பட வேண்டாம். சீக்கிரமே தீர்வு காணப்படும் மகனே’ என பதில் அளித்துள்ளார்.

மேலும் படிக்க