• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது

May 24, 2017 தண்டோரா குழு

சி.பி.எஸ்.இ பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்றழைக்கபடும் சி.பி.எஸ்.இ பாட திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஏதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் மதிப்பெண் பிரச்சனை காரணமாக இன்று தேர்வு முடிவுகள் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ வழியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும் முடிவை ரத்து செய்வதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.இதனை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதிகள் கீதா மிட்டல், பிரதிபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இவ்விசாரணையின் போது பொது தேர்வில் தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும், இந்த நடைமுறையை இந்த ஆண்டு முதலே அமல்படுத்த வேண்டும் என்று சி.பி.எஸ்.இ-க்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக சிபிஎஸ்இ ஆலோசனைக்கூட்டம் இன்று நடத்துகிறது. மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜுன் முதல் வாரத்தில் வெளியாகலாம் என ஏதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க