• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சி.ஐ.ஐ.யின் கல்வி தொழில் நுட்ப கண்காட்சி 2024 (CII EDU TECH EXPO 2024) மற்றும் தேசிய உயர் கல்வி மாநாடு துவக்கம்

November 15, 2024 தண்டோரா குழு

சமூகத்தில் உள்ள முக்கிய சவால்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நவீன மற்றும் புதுமையான ஆராய்ச்சிகளை மாநிலப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்கள் முன்னெடுக்க ‘தமிழ்நாடு முதலமைச்சரின் ஆராய்ச்சி மானியம்’ மிகவும் பயனுள்ளதாக வடிவமைக்கப்பட்ட ஒரு முன்னோக்கு முன்முயற்சியாகும் என தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் – உயர்கல்வி துறை K. கோபால் வெள்ளிக்கிழமை கோவையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு – தெற்கு பகுதியின் (CII SOUTHERN REGION ) சி.ஐ.ஐ. கல்வி தொழில் நுட்ப கண்காட்சி 2024ல் (CII EDUTECH EXPO 2024) கூறினார்.

சி.ஐ.ஐ என்றழைக்கப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் முதலாவது சி.ஐ.ஐ. கல்வி தொழில் நுட்ப கண்காட்சி (CII EDUTECH EXPO) மற்றும் அதன் தேசிய உயர் கல்வி மாநாட்டின் 8 ஆம் பதிப்பு இன்று கோவையில் நடைபெற்றது.இந்த மாநாடு நவம்பர் 15-16 கோவை கொடிசியா அரங்கில் நடைபெறுகிறது.

இதன் துவக்க நிகழ்வில் K. கோபால், தமிழக அரசின் உயர்கல்வி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் – கலந்து கொண்டு, சி.ஐ.ஐ. மற்றும் கே. பி.எம்.ஜி. எனும் ஆய்வு அமைப்பு தயாரித்த உயர் கல்வி குறித்த முக்கிய அறிக்கையை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்வில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் S.மலர்விழி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, உயர் கல்வி அறிக்கையின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

முன்னதாக சி.ஐ.ஐ.யின் தெற்கு பகுதியின் தலைவர் R. நந்தினி, சி.ஐ.ஐ.யின் கோவை மண்டல முன்னாள் தலைவர் செந்தில் கணேஷ், சி.ஐ.ஐ.யின் தெற்கு பகுதி முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், காக்னிசன்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் வாரியர், கே. பி.எம்.ஜி. நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர் நாராயணன் ராமசாமி, மற்றும் சி.ஐ.ஐ.யின் கோவை மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

K.கோபால் பேசுகையில்,

நிகழ்காலத்தில் உயர் கல்வி பாடத்துடன் தற்போது வேலைவாய்ப்புக்கு தேவைப்படும் அவசிய திறன்களை ஒன்றிணைக்க அரசு ‘விளைவுகளை மையப்படுத்தி கல்வி கற்பித்தல்’ எனும் முறையை பின்பற்றுகிறது என குறிப்பிட்டார்.

21 ஆம் நூற்றாண்டுக்கு தேவையான திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வழிவகை செய்யவும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதே சமயம், தொழில்துறையுடன் கல்வி துறை கைகோர்த்து மாணவர்களுக்கு கல்வி பயிலும் போதே தொழிற்பயிற்சி (INTERNSHIPS), தொழில்துறை தேவைகளை மையப்படுத்திய ஆய்வுகள் ஆகியவற்றை வழங்குவது அவர்களை இப்போதே எதிர்காலத்திற்கு தயார் செய்வதுடன், நமது பொருளாதார வளர்ச்சியை மேம்பட செய்யவும் வழிவகுக்க கூடிய ஒன்றாக அமையும் என்றார்.

CII தெற்கு பகுதியின் தலைவரும் இந்த சி.ஐ.ஐ. கல்வி தொழில் நுட்ப கண்காட்சியின் தலைவருமான ஆர்.நந்தினி தனது வரவேற்பு உரையில், உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கக்கூடிய திறமைமிகு பணியாளர்களையும், தலைவர்களையும் கோவையில் உள்ள நன்மதிப்பு பெற்ற கல்வி நிறுவனங்கள் உருவாகியுள்ளது என கூறினார். இங்கு நிலவும் சிறந்த கல்வி கட்டமைப்பு, பொறியியலும், தொழில்துறையும் ஒன்று சேர்ந்த செழிக்க வைத்துள்ளது. இது ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக கோவை திகழ ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்றார்.

காக்னிசண்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் வாரியர் பேசுகையில்,

தொழில்த்துறைக்கு தயாரான, தேவையான சிறந்த பணியாளர்களை உருவாக்க கல்வித்துறை மற்றும் தொழில்துறை இடையே உள்ள இடைவெளியை இணைக்க வேண்டியது அவசியம் என்றார்.

இதையடுத்து 2050ல் உயர் கல்வியின் எதிர்காலம்; உயர் கல்வியில் நிகழும் மாற்றங்கள்; தொழில்துறைக்கு தயாராகுதலை ஊக்குவித்தல், அறிவுசார்ந்த படைப்புகளை சந்தைப்படுத்துதல்; உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு அமர்வுகள் நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க