• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சி.எஸ்.ஐ.ஆலய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் மோசடி – 4 பேர் மீது வழக்குப்பதிவு !

April 22, 2021 தண்டோரா குழு

கோவையில்,சி.எஸ்.ஐ.ஆலய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொகை 25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக,பேராயர் திமோத்தி ரவீந்தர்,முன்னாள் செயலாளர் சார்லஸ் உட்பட நான்கு பேர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

கோவை வெள்ளலூரில் உள்ள சி.எஸ்.ஐ., சர்ச்சில்,பாதிரியாராக இருப்பவர் ஜெர்சோம் ஜேக்கப், இவர் கோவை குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், கடந்த,2005 முதல், கோவை மண்டல சி.எஸ்.ஐ., ஆலய நிர்வாகத்தின் கீழ் தாம் பணியாற்றி வருவதாகவும்,தமது வருங்கால வைப்பு நிதி தொகையை,சி.எஸ்.ஐ., அலுவலகத்திற்கு தொடர்ந்து செலுத்தி வந்த நிலையில், வருங்கால வைப்பு கணக்கு குறித்து,கேட்டபோது, சி.எஸ்.ஐ., அலுவலக தரப்பில் இருந்து சரியான விவரங்கள் தமக்கு தரப்பபடவில்லை எனவும்,மேலும் மண்டலத்திற்கு உட்பட்ட,125 சர்ச்சுகளில் பணிபுரிந்து வரும், என்னைப் போன்ற பலரது வருங்கால வைப்பு நிதியான,சுமார், 25 கோடி ரூபாய்க்கு மேல்,கணக்கில் காட்டப்படமால் மோசடி செய்துள்ளதாக அவர் புகார் அளித்திருந்தார்.

இவரது புகாரின் பேரில்,பிஷப் திமோத்தி ரவீந்தர்,முன்னாள் செயலாளர் சார்லஸ், ஆலோசகர் மங்கள் தாஸ்,பொருளாளர் செல்வகுமார் ஆகிய நால்வர் மீது, கூட்டு சதி நம்பிக்கை மோசடி, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை மண்டலத்திற்கு உட்பட்ட சி.எஸ்.ஐ. ஆலயம் தொடர்பான 25 கோடிக்கு மேல் மோசடி வழக்கு குறித்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க