• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சி.ஆர்.என்.ஐ என்ற புதிய கூட்டமைப்பு கோவையில் துவக்கம்

June 16, 2022 தண்டோரா குழு

ரியல் எஸ்டேட் அதிபர்கள்,பொறியாளர்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் உற்பத்தியாளர்கள் ஆகியோர் இணைக்கும் சி.ஆர்.என்.ஐ என்ற புதிய கூட்டமைப்பு கோவையில் துவங்கப்பட்டுள்ளது.

கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள், பொறியாளர்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் உற்பத்தியாளர்கள் ஆகியோரை இணைக்கும் வகையில் சி.ஆர்.என்.ஐ என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த புதிய அமைப்பின் துவக்க விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தலைவர் பொன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் பில்டர்ஸ் வேர்ல்டு என்ற கட்டுமான துறை சார்ந்த அதிகாரப்பூர்வமான மாத இதழ் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது குறித்து அதன் நிறுவனர் லிங்கராஜ் கூறும்போது,

ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், பொறியாளர்கள், அதேபோல் செங்கல், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருள் உற்பத்தியாளர்கள் ஆகியோர் இணையும் புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் கட்டுமானம் துறை சார்ந்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும், மேலும் ஒவ்வொருவரும் தங்களது தொழிலிலும், தாங்கள் சார்ந்த குழுவிலும் சிறந்து விளங்க இந்த கூட்டமைப்பு உதவும் என தெரிவித்தார்.

மேலும் கட்டுமானத் துறையில் முன்னணியில் உள்ளவர்களைக் கொண்டு புதிதாக கட்டுமானத் துறைக்கு வரும் முனைவோர்களுக்கு பயிற்சிப் பட்டறைகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கோவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக தனித்தனியாக குழுக்கள் துவங்கி கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கு இந்த அமைப்பு உதவும், மேலும் இதன் மூலம் சரியான விலை, தரமான பொருட்கள், விற்பனைக்கு பிந்தைய சேவை என இதன் உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட முடியும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க