March 21, 2018
தண்டோரா குழு
சிஸ்டம் முழுவதையும் மாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இமயமலை பயணம் முடிந்து நேற்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த், இன்று தென்சென்னை மாவட்ட,ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரைசிங் மூலம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
“இதயத்தை, எண்ணங்களை தூய்மையாக வைக்க வேண்டும். ஆண்டவன் நமக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி, அரசியலில் மாற்றத்தை கொண்டு வர நாம் உழைக்க வேண்டும், சிஸ்டம் முழுவதையும் மாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். பதவி கிடைக்கவில்லை என்று யாரும் பொறாமையோடு இருக்காமல், ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் ,அவர் மீதமுள்ள 16 மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்த பிறகு அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.