• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவராத்திரி பூண்டி மலை ஏற்றத்துக்கு வனத்துறையினர் பணம் வசூலிப்பதில் பக்தர்கள் அதிர்ச்சி

February 28, 2022 தண்டோரா குழு

தென் கைலாயம் என அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது இங்கு உள்ள கோவில் அடிவாரத்திலிருந்து செங்குத்தாக உள்ள ஆறாவது மலைகளை கடந்து ஏழாவது மலையில் சுயம்புலிங்கமாக வெள்ளிங்கிரி ஆண்டவரே ஆண்டவரை பக்தர்கள் தரிசிப்பது வழக்கம்.

ஆண்டுதோறும் மகா சிவராத்திரி சித்ரா பவுர்ணமி சித்திரை 1 ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 4 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் வெள்ளிங்கிரி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் மலை ஏற வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் இரண்டு நாட்கள் மகாசிவராத்திரி வருவதால் ஏராளமான பக்தர்கள் வெள்ளிங்கிரி மலை ஏற வருகின்றனர் இதனையொட்டி அங்கு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு இன்னும் முறையாக அனுமதி அளிக்கப்படவில்லை ஆனாலும் மலையேறும் பக்தர்களுக்கு அவர்களிடம் வனத்துறையினர் சார்பாக ரூபாய் 100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அதனால் அதற்கு ரசீது கொடுப்பது இல்லை இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வெள்ளிகிரிமலை வரும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் பின்பற்றும் முறையே அமல்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரும்பாலோனோர் சிவபக்தர் என்பதால் அவர்களிடம் பணம் வசூலிப்பது வருத்தமளிக்கிறது என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க