March 7, 2018
தண்டோரா குழு
பாஜகவை சேர்ந்தவர்கள் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.எச்.ராஜாவின் இந்தக் கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில்,பாஜகவை சேர்ந்தவர்கள் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேலும்,சிலை உடைப்பு சம்பவங்களை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளதாக மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.