• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிலி நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை

February 27, 2017 தண்டோரா குழு

சிலி நாட்டில் பெரும் மழை மற்றும் நிலச்சரிவால் அந்நாட்டின் முக்கியமான ஆற்றின் தண்ணீர் மாசு படிந்துவிட்டது. அதனால், அதிகாரிகள் அந்நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் உள்ள 40 கோடி மக்களுக்குக் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

“சிலி நாட்டில் பாயும் மைபோ ஆற்றிலிருந்து தலைநகர் சாண்டியாகோவிற்கு குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது, அந்த ஆற்று நீர் அசுத்தமாக இருக்கிறது. ஆற்று நீர் எப்போது மாசு நீங்கி தூய்மாகி ஓடுகிறதோ, அது வரையில் நாட்டின் பல பகுதிகளுக்கு அங்கிருந்து குடிநீர் வழங்குவது நிறுத்தப்படும்” என்றார்.

அந்நாட்டு மக்கள் தண்ணீரைப் பெரிய பெரிய பாட்டில்களில் நிரப்பி வைத்துப் பயன்படுத்துகின்றனர். வர்த்தக நிறுவனங்கள் மற்றும் விடுதிகளை மூடும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிகள் திங்கள்கிழமை (பிப்ரவரி 27) திறப்பதாக இருந்தது. குடிநீர் பிரச்சினை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“ஆண்டஸ் மலையில் இருந்து தண்ணீர் அதிகமாக விழுவதால், சாலைகள் துண்டிக்கப்பட்டுவிட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று அவசர சேவை அதிகாரி தெரிவித்தார்.

“குடிநீர் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டால், ஒன்றரை லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர். முப்பது மாநிலங்கள் முழுவதுமோ அல்லது பாதி பகுதிகளோ கடுமையாகப் பாதிக்கப்படும். மறுபடியும் எப்போது குடிநீர் வழங்கப்படும் என்று எங்களுக்கே தெரியவில்லை.

மைபோ ஆறு சுத்தமாகும் வரை, குடிநீர் சேவை குறித்து எந்த உத்தரவாதமும் எங்களால் தர முடியாது. வானிலை நிலவரம், மலை மீது புயல் உண்டாகி பலத்த மழை வந்தால்தான் குடிநீர்ச் சேவை திரும்ப வாய்ப்புள்ளது” என்று சாண்டியாகோ ஆளுநர், கிளாடியோ ஒர்றேகா தெரிவித்தார்.

சிலி நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்து விட்டனர். அந்நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக கொடிய காட்டுத் தீ தொடர்ச்சியாகப் பல வாரங்களுக்கு எரிந்தது.

மேலும் படிக்க