• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிலி நாட்டில் காட்டுத் தீ, 100 வீடுகள் சாம்பல்

January 4, 2017 தண்டோரா குழு

சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 1௦௦ வீடுகள் சாம்பலாயின. 400 பேர் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வேகமாகக் காற்றடித்ததால், தீ பரவி, இந்தச் சேதம் ஏற்பட்டது. தீயினால், 19 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

இது குறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை (ஜனவரி 3) கூறியதாவது:

“சிலி நாட்டின் துறைமுக நகரமான வல்பரைசோவில் உள்ள லகுனா வேர்டே நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ பரவியது. ப்ளையா அஞ்சா மலையில் ஏராளமான வீடுகள் மரத்தால் ஆனவை. காட்டுத் தீயால் 1௦௦ வீடுகள் சாம்பலாகிவிட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து 400 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஒரு மணி நேரத்தில் 3௦ கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் தீயணைப்பு வீரர்களும் வனத்துறையினரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். நீர் நிலைகள் வறண்டு இருப்பதாலும், சாலைகள் குறுகலாக இருப்பதாலும் அதிகம் போராட வேண்டியுள்ளது. அப்பகுதி மக்கள் வெளியே செல்ல நேரிடும் போது தீ மற்றும் மாசு புகையில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முகமூடிகள் அணிய வேண்டியுள்ளது” என்றார்.

சிலி நாட்டின் உள்துறை சார்புச் செயலாளர் முகம்மது அலேயு கூறுகையில், “அப்பகுதியில் இருந்த 1௦௦ வீடுகள் சேதமடைந்துள்ளன” என்றார்.

ஆளுநர் கப்ரியேல் அல்டோனே கூறுகையில், “5௦௦ வீடுகள் ஆபத்தில் உள்ளன. காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட 16 பேருக்குச் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என்றார்.

அதே துறைமுக நகரில், 2௦14ல் நடந்த தீ விபத்தில் 2,5௦௦ வீடுகள் நாசமாயின. 15 பேர் உயிரிழந்தனர். அழகிய வண்ணங்களைக் கொண்டு குன்றின் மேல் உள்ள வீடுகள் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் அந்நகரம் 2௦௦3ல் உலக பாரம்பரிய இடமாக ஐ.நா. சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க