• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறை விதிகளை மீறும் சசிகலா

April 6, 2017 தண்டோரா குழு

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நடராஜன் பெங்களூர் பரப்பனா அக்ரஹரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதுவரை அவரை 19 பேர் சந்தித்துள்ளனர் என்று தகவல் அறியும் சட்டம்(RTI) வெளிப்படுத்தியுள்ளது.

பொதுவாக குற்றவாளிகளை அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் சந்திக்க வேண்டும் என்று சட்டமுண்டு. ஆனால், சசிகலாவை அவரது கணவர் நடராஜன், வழக்கறிஞர்கள், டிடிவி. தினகரன், குடும்ப உறுப்பினர்கள், வளர்மதி, கோகுல இந்திரா போன்ற கட்சி நிர்வாகிகள் உட்பட 19 பேர் சந்தித்துள்ளனர். பார்வையாளர்கள் யாரும் 5 மணிக்கு மேல் சிறைக்கு வந்து கைதிகளை சந்திக்க கூடாது என்பது சிறையின் கட்டளை.ஆனால் சசிகலாவை சிலர் 6 மணிக்கு மேல் வந்து சந்தித்துள்ளனர்.

மேலும் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் அதிமுக பொது செயலாளர் சசிகலாவிற்கு எந்த சிறப்பு சலுகையும் தரப்படமாட்டாது என்றும் அவரை மற்ற சிறை கைதியை போல் தான் நடத்தப்படுவார் என்று உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

ஆனால் தற்போது சிறை சட்டங்கள் அவமதிக்கப்படும் நிலையில் இருக்கிறது. இரட்டை இலையை தங்களுக்கு தர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை அணுகும் முன்பாக மக்களவை துணை சபாநாயகர், தம்பிதுரை மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் சசிகாலவை பெங்களூர் சிறையில் சந்தித்துள்ளனர்.இது தவிர சசிகலாவை தமிழ்நாட்டு சிறைக்கு மாற்ற டி.டி.வி. தினகரன் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க