• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறையில் காயம் அடைந்த கைதிகளுக்கு எந்தவிதமான மருத்துவ சிகிச்சை அளிக்க வில்லை – வழக்கறிஞர் புகார்

September 26, 2023 தண்டோரா குழு

கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும் காவலர்களுக்கு இடையே கடந்த வாரம் கலவரம் ஏற்பட்டது.கைதிகளும் காவலர்களும் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டதில் கைதிகள் மற்றும் காவலர்கள் பலத்த காயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இது குறித்து சம்பந்தபட்ட வழக்கறிஞர்கள் நேரில் சென்று கைதிகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞர்கள்,

சிறையில் நடந்த கலவரம் குறித்து கைதிகளிடம் கேட்கச் சென்ற போது காவலர்கள் சுற்றி நின்று கைதிகளை பேசிவிடாமல் தடுத்து வருகின்றனர்.சிறையில் நடந்த கலவரம் குறித்து கைதிகள் வழக்கறிஞர்களிடம் கூறியதாக சில காவலர்கள் பெயரை தெரிவித்தார்.

சிவக்குமார்,ராகுல், சடையன், ஷாஜகான் மற்றும் சில காவலர்கள் பெயரை கைதிகள் தெரிவித்ததாக வழக்கறிஞர் கூறினார். சிறையில் இருக்கும் கைதிகளை காவலர்கள் மனித உரிமை மீறி தாக்கி உள்ளதாகவும் அந்த 7 கைதிகளில் வயிற்றில் கண்ணாடிகள், பிளேடுகள் போன்றவற்றை உள்ளே இருப்பதாக வழக்கறிஞர் கூறினார்.

இந்த 7 கைதிகளை தனி சிறையில் அடைத்து வைத்து இரவு நேரங்களில் தூங்குவிடாமல் தண்ணீர் ஊற்றுவதாகவும் சரியான முறையில் உணவு மற்றும் மருத்துவம் பார்க்கவில்லை என காவலர்கள் மீது வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.இதுகுறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இது தொடர்பாக சட்டப் போராட்டம் நடத்த இருப்பதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

காவலர்கள் சிறையில் கைதிகளின் கை,கால்களை உடைத்து சாப்பிட முடியாத அளவிற்கு சித்திரவாதம் செய்து வருவதாக கூறினார். இதனால் கைதிகளுக்கு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிறையில் நடந்த கலவரத்திற்கு முழுக்க முழுக்க சிறை கண்காணிப்பாளர் தான் காரணம் என்று தெரிவித்தார்.சிறையில் கைதிகளை சந்தித்து குறைகளை கேட்கச்சென்ற வழக்கறிஞர்களை ஷூவை கலட்ட கோரியும், சட்டையை கழட்ட கோரியும் சிறைக்காவலர்கள் வழக்கறிஞர்களை கைதி போல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டினர்.

மேலும் படிக்க