October 8, 2018
தண்டோரா குழு
மகாராஷ்டிர மாநிலத்தில் சிறையில் உள்ள பெண் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ கால் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் புனே சிறைத்துறையில் நாட்டிலேயே முதல் முறையாக வீடியோ கால் மூலம் பேசும் வசதி அமலுக்கு வந்துள்ளது. இதற்காக சிறைக் கைதிகள் நல நிதியில் இருந்து ஆண்ட்ராய்டு செல்போன்கள் வாங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட நாளில் 5 நிமிடத்திற்கு கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேசலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக 5 நிமிடம் பேச ரூ.5 வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், கைதிகள் வீடியோ கால் பேசும் பொழுது கான்ஸ்டபுள் மூலமாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும் குடும்ப விசயங்கள் தவிர்த்து வேறெதுவும் பேச கைதிகளுக்கு அனுமதியில்லை என்றும் சிறைத்துறை தெரிவித்துள்ளது. இதற்காக தனி அறை ஒன்றும் சிறை வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இடையடுத்து, புனே யெரவாடாவில் உள்ள பெண்களுக்கான சிறையில் வீடியோ கால் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.