• Download mobile app
22 Jan 2026, ThursdayEdition - 3634
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறு தொழில்கள், ஆன்லைன் வணிக வளர்ச்சிக்கு உதவும் ‘ஷிப்ராக்கெட் யாத்ரா 2026’ நிகழ்ச்சி: கோவையில் நடைபெற்றது

January 22, 2026 தண்டோரா குழு

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் மக்களிடம் நேரடியாக வர்த்தகம் செய்யும் பிராண்டுகளின் வளர்ச்சியை, தொழில்நுட்பம் மற்றும் தரவுகள் மூலம் வேகப்படுத்த இந்தியாவின் முன்னணி மின்னணு வணிக தளமான ஷிப்ராக்கெட் கோவையில் ‘ஷிப்ராக்கெட் யாத்ரா 2026’ என்னும் நிகழ்ச்சியை நடத்தியது.

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் மின்னணு வணிக சூழலை மேலும் வலுப்படுத்த, உள்ளூர் தொழில்முனைவோர், நிறுவனர்கள் மற்றும் இத்துறை சார்ந்த முக்கியத் தலைவர்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர். இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தகச் சந்தைகளில் ஒன்றாக தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. விற்பனையாளர்களின் ஆர்வம், பலதரப்பட்ட பொருட்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தெளிவான வாங்கும் முறை ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.

கடந்த ஆறு மாதங்களில் ‘ஷிப்ராக்கெட் ட்ரெண்ட்ஸ்’ வெளியிட்ட தரவுகளின்படி, இம்மாநிலத்தின் ஆர்டர்களின் எண்ணிக்கை சீராக உள்ளது. பண்டிகைக் காலங்களில் ஏற்பட்ட விற்பனை வளர்ச்சி, அதற்குப் பின்னரும் குறைவில்லாமல் தொடர்வது, மக்களிடம் நிலையான தேவை இருப்பதை காட்டுகிறது.

இது குறித்து இந்நிகழ்ச்சியில் பேசிய ஷிப்ராக்கெட் நிறுவனத்தின் உள்நாட்டு ஷிப்பிங் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி அதுல் மேத்தா கூறுகையில்,

“தமிழ்நாடு எப்போதுமே உற்பத்தித் துறை மற்றும் தொழில்முனைவோரின் வலிமையான மையமாகத் திகழ்கிறது. இன்று கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் உள்ள சிறு தொழில்களும், மக்களிடம் நேரடியாக வர்த்தகம் செய்யும் பிராண்டுகளும் டிஜிட்டல் வர்த்தகத்தை மிக வேகமாக ஏற்றுக்கொண்டு வளர்ந்து வருவது ஒரு பெரிய மாற்றமாகும். மக்கள் அதிக மதிப்புள்ள பொருட்களை வாங்குவதையும், முன்கூட்டியே பணம் செலுத்தும் முறையையும் அதிகம் விரும்புவதை எங்களின் தரவுகள் காட்டுகின்றன. விற்பனையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆர்டர்களைச் சரியாகக் கையாள்வதற்கும், விற்பனையான பொருட்கள் திரும்ப பெறுவதை குறைப்பதற்கும், தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத் தொழிலை உருவாக்கவும் உதவுவதே இந்த யாத்ராவின் நோக்கமாகும்” என்றார்.தமிழ்நாட்டு மக்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் முறையில் ஏற்பட்டுள்ள தெளிவான மாற்றங்களை ஷிப்ராக்கெட் தளத்தின் தரவுகள் காட்டுகின்றன.

அதிகரிக்கும் ஆர்டர் மதிப்பு: மாநிலத்தில் சராசரி ஆர்டரின் மதிப்பு சுமார் ரூ.1,100 ஆக உள்ளது. மக்கள் ஆன்லைன் வர்த்தகத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையும், குறைந்த விலை பொருட்களைத் தாண்டி, அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்கும் மனநிலையும் வளர்ந்து வருவதை இது காட்டுகிறது. முன்கூட்டியே பணம் செலுத்துதல்: ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையை விட, ஆன்லைனிலேயே முன்கூட்டியே பணம் செலுத்தும் ஆர்டர்கள் அதிகமாக உள்ளன.

ஆன்லைன் பிராண்டுகள் மீதான மக்களின் நம்பிக்கையும், பணம் செலுத்தும் வசதிகள் சுலபமாகி இருப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.குறைவான ரிட்டர்ன்: ஆர்டர் செய்த பொருட்கள் டெலிவரி ஆகாமல் திரும்பி வரும் விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. பொருட்கள் சிறப்பான முறையில் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யப்படுவதால் விற்பனையாளர்களுக்குப் பொருட்கள் திரும்புவது குறைந்துள்ளது.

மேலும் படிக்க