• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறு குறு விவசாயிகளுக்கு மானியத்தில் மின் மோட்டார் பம்பு செட்டுகள் வழங்கப்படும் – ஆட்சியர்

July 1, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அரசு மானியத்துடன் திறன் குறைந்த பழைய மின் மோட்டாரை மாற்றி புதிய மின் மோட்டார் பம்ப் செட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆட்சியார் சமீரன் தெரிவித்துள்ளதாவது:

நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மூன்று ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள புதிய மின் இணைப்பு பெற்றுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சம் 10 குதிரைத்திறன் வரை புதிய மின்மோட்டார் பம்ப் செட் பெறவும், பழுதான மற்றும் திறன் குறைந்த பழைய பம்பு செட்டை மாற்றிடவும் ரூ.10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.3.10 லட்சத்தில் 31 மின்மோட்டார் பம்பு செட்டுகள் அமைத்து தரப்படும்.

மேலும் இத்திட்டம் தொடர்பாக முழு விபரங்களை பெற்றிட கோவை மாவட்ட விவசாயிகள் தடாகம் சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் தொலைபேசி எண் 0422-2434838, உதவி செயற்பொறியாளர் அலுவலகம் தொலைபேசி எண் 0422-2966500, பொள்ளாச்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம் தொலைபேசி எண் 04259-292271 ஆகிய வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க