• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறு, குறு தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் சிங்காநல்லூர் தொகுதி ம. நீ. ம வேட்பாளர் மகேந்திரன் பிரசாரம்

March 29, 2021 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வாக்குகளை சேகரித்து வருகிறார்.அதன்படி நேற்று பீளமேடு, ஆவாரம்பாளையம், ஜெகநாதன் காலனி, ஆர்கே மில் காலனி, வார்டு எண் 65, கருணாநிதி நகர், உடையாம்பாளையம் மெயின் ரோடு, மீனா எஸ்டேட், கண்ணபிரான் மில் ரோடு, நவீன் நகர், கிருஷ்ணா காலனி, ராஜீவ் காந்தி நகர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது :

இப்பகுதியில் சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது இங்கு உள்ள தொழிற்சாலைகள் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் இந்த பகுதி முழுவதும் சாலை வசதி,குடிநீர் வசதி,பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றித் தரப்படும் மக்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் அந்த கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் ஆகவே இத்தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிடும் எனக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் உங்களில் ஒருவனாக இருந்து உங்களுக்காக உழைக்க ஒரு வாய்ப்பு அளியுங்கள்,

இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தின் போது வேட்பாளர் மகேந்திரன் மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் தொண்டர்கள் வீதி வீதியாக சென்று டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

மேலும் படிக்க