February 14, 2018
தண்டோரா குழு
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் 19ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சிறுமி ஹாசினி கொலை தொடர்பாக அதே குடியிருப்பில் வசிக்கும் தஷ்வந்த் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் கடந்த டிசம்பர் 2ம் தேதி தனது தாய் சரளாவையும் கொலை செய்து தப்பி சென்று மும்பையில் மீண்டும் பிடிபட்டார்.இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் வரும் 19ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறிவித்துள்ளார்.