கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அன்னூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் விஜயகுமார்(36) என்பவர் மீது மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அவர்களால் வழக்கு பதிவு செய்து மேற்படி நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேற்கண்ட நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர் “பாலியல் குற்றவாளி” என உறுதி செய்து விஜயகுமார்(36) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
அவ்வுத்தரவின்படி பாலியல் வன்புணர்ச்சி வழக்கு குற்றவாளியான விஜயகுமார்(36) என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 62 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள்
ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு – 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்
பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் பாராட்டு
ஜனவரி மற்றும் ஜூன் 2025 க்கு இடையில் 36,194 வாகனங்களை விற்பனை செய்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா சாதனை
தமிழ்நாடு அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை விளக்கிக் கொள்ள வேண்டும் ! தமிழக தொழில் அமைப்புகளின் வேண்டுகோள்!!