• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுமியின் வித்யாசமான பிறந்த நாள் கொண்டாட்டம்

March 16, 2017 தண்டோரா குழு

வீட்டில் உள்ள குழந்தைகளுடைய பிறந்த நாள் வருகிறதென்றால், அந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாவேண்டும், யாரையெல்லாம் விருந்துக்கு அழைக்க வேண்டும் என்று பெற்றோர் பட்டியலிடுவது வழக்கம். பிறந்த நாளுக்குப் புதிய ஆடை, கேக், பலூன் என்று வாங்கி அந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

ஆனால், அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கும் 6 வயது சிறுமி தன்னுடைய பிறந்த நாளை ஏழை மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று தீர்மானித்துச் செயல்படுத்தியிருக்கிறாள்.

அர்மானி குருவ்ஸ் தனது 6வது பிறந்த நாளை மார்ச் 5ம் தேதி கொண்டானாள். தன்னுடைய பிறந்த நாளின்போது, ஆதரவற்ற மக்களுக்கு உதவ வழங்க வேண்டும் என்று தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளாள்.

முதலில் அவளுடைய பெற்றோர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், தன்னுடைய கூற்றில் மகள் உறுதியாக இருப்பதை அவர்கள் பிறகு உணர்ந்தனர்.

அவளுடைய தாய் அர்டேஷா குருவ்ஸ் கூறுகையில், “அவளுடைய பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என்று கேட்கும்போதெல்லாம், ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கவேண்டும் என்று மட்டும் வலியுறுத்தி வந்தாள்” என்றார்.

அர்மானியின் விருப்பத்தை நிறைவேற்ற, அவளுடைய பெற்றோர் சண்ட்விச்களைத் தயாரித்து தங்குவதற்கும் இடம் இன்றித் தவிப்போருக்கு வழங்கினர். ஆனால் அது போதுமானதாக இல்லை.

“அர்மானி எங்களிடம், இதெல்லாம் போதாது. என்னுடைய பிறந்த நாள் விழாவிற்கு நீங்கள் என்னென்ன செய்வீர்களோ அதையெல்லாம் இந்த ஏழைகளுக்கும் செய்ய வேண்டும்” என்றாள்.

கோழி, மீன், சோளம், பச்சை பீன்ஸ், ஸ்பாகெட்டி எனப்படும் ஒரு வித சுவையான நூடுல்ஸ், பிசைந்த உருளைக்கிழங்கு, ரோல்ஸ், கேக், பிஸ்கட் வகைகள், பழம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை 3௦௦ டாலருக்கு பெற்றோர் வாங்கினர்.
அர்மானியின் இந்தப் பணிக்கு ஆதரவாக அங்கிருந்த தேவாலய உறுப்பினர்களும் சிற்றுண்டி, குளியல் பொருட்கள், தின்பண்டங்கள் என பல பொருட்களை வழங்கினர். அப்படி கிடைத்த பொருள்களையெல்லாம் சிகாகோ கிழக்கு கார்பீல்ட் பார்க் அருகே வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கும் அர்மானியின் குடும்பத்தினர் வழங்கினர்.

“வரும் வாரத்தில் மற்றொரு தானார்வ முயற்சி செய்ய அர்மானி விரும்புகிறாள். அவளுக்கு எப்பொழுதும் பெரிய இதயமுண்டு. இந்தப் பிறந்த நாள் ஒரு விசேஷ நாளாகும். மக்களுக்கு உதவி செய்வதில் அவள் மகிழ்ச்சியடைகிறாள். அவளுடைய வார்த்தையின்படி, ‘நல்லது செய்வதே உயர்ந்தது‘. அவளுடைய பெற்றோராகிய நாங்கள் எங்களால் முடிந்த வரை அவளுக்கு ஆதரவாக இருப்போம்” என்று அவர்கள் நெகிழ்ச்சியோடு கூறினர்.

மேலும் படிக்க