November 20, 2020
தண்டோரா குழு
கோவையில் ஒன்றரை வயது சிறுமியின் பெருங்குடலில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சையின்றி வெறும் பத்து நிமிடங்களில் லேப்ரோஸ்கோபி சிகிச்சை மூலம் அகற்றி கோவையை சேர்ந்த மருத்துவர் சாதனை புரிந்துள்ளார்.
கோவை துடியலூர் சேர்ந்த ஒன்றரை வயது சிறுமி கடந்த இரண்டு மாதங்களாக மலக்குடல் வழியாக அதிக அளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது பல்வேறு மருந்துகள் மற்றும் சிகிச்சை செய்தும் நோய் குணமாகாததால் சிறுமியை நியூ சித்தாபுதூர் உள்ள எஸ்.ஜி. கேஸ்ட்ரோ கேர் மருத்துவமனையின் தலைமை குடலியல் சிறப்பு நிபுணர் டாக்டர் கணேஷிடம் அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், சிறுமியின் பெருங்குடலில் நான்கு சென்டிமீட்டர் அளவில் இரத்த கசிவுடன் கட்டி ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளார்.தொடர்ந்து அவர், அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்து இல்லாமல் மிக திறமையாக லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் வெறும் பத்தே நிமிடங்களில் கட்டியை அகற்றியுள்ளார்.
இந்நிலையில் இந்த அரிய வகை லேப்ராஸ்கோபிக் சிகிச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, மருத்துவர்
கணேஷ்மிகவும் அரிதாக வரும் இந்த கட்டியை ஒன்றைரை வயது குழந்தையின் மலக்குடலில் இருந்து மிக குறைந்த நேரத்தில் அகற்றியதாகவும்,குறிப்பாக அறுவை சிகிச்சையின்றி நவீன வகை லேப்ரோஸ்கோபிக் சிகிச்சையை பயன்படுத்தியதால் குறைந்த நேரத்தில் அதிக செலவில்லாமல் இந்த சிகிச்சையை செய்து முடித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.