• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுகதைகள் கூறி உலக சாதனை படைத்த டாப்ஸ் பப்ளிக் பள்ளி தலைமை ஆசிரியர் !

September 20, 2021 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டியில் உள்ள டாப்ஸ் பப்ளிக் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறார் ஜெயந்தி.இவர் சிறுகதைகள் கூறி உலக சாதனை படைத்துள்ளார். ஐந்து மணி நேரத்தில் 60 கதைகள் கூற வேண்டும் என்பது விதிமுறை.ஆனால் இவர் ஐந்து மணி நேரத்தில் 74 கதைகளை கூறி உலக சாதனையை படைத்துள்ளார்.

19ம் தேதி அன்று டாப்ஸ் பப்ளிக் பள்ளியில் இந்நிகழ்வு நடைபெற்றது.இதில் டாப்ஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர்.கார்த்திகேயன், அப்பள்ளியின் ஆலோசகர்.சௌந்தரராஜன் (PSG கல்லுரியின் பேராசிரியர்) அப்பள்ளியின் செயலாளர்.அனிதா கார்த்திகேயன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்தது வைத்தனர்.

காலை 9மணிக்கு கதை கூற ஆரம்பித்த ஜெயந்தி மதியம் 2.36 வரை தொடர்ந்து ஐந்து மணி நேரத்தில் 74 கதைகளை கூறி உலக சாதனையை படைத்தார்.இதை நேரலையாக எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் மேலாளர் டாக்டர். சத்திய ஸ்ரீ குப்தா, ஏசியன் ரெக்கார்ட் அகாடமி மேலாளர்.சிவக்குமார்,இந்தியன் ரெக்கார்டு அகடமி மேலாளர் ஜெகநாதன் மற்றும் தமிழன் புக் ரெக்கார்ட்ஸ் மேலாளர் டாக்டர்.ராஜ கிருஷ்ணா ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வினை நேரில் காணும் சான்றாளராக முனைவர்.பழனிசாமி (கோவை மாவட்ட அறிவியல் அலுவலர்) நேரக்காப்பாளராக சரண்யா மற்றும் கோமதி ஆகியோர் இருந்தனர். மேலும் மாலை 3 மணியளவில் ஜெயந்தி உலகசாதனை படைத்தனை உறுதிசெய்து அவருக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பெதப்பம்பட்டி RGM மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் லஷ்சுமி, கோவை கோகுலம் ஹோட்டல் மேலாளர் நீனா கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

மேலும் படிக்க