September 4, 2025
தண்டோரா குழு
கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி NIRF எனும் தேசிய கல்வி நிறுவன கட்டமைப்பு தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளின் செயல்பாடு மற்றும் கட்டைமைப்புகளின் அடிப்படையில், 2025 ஆண்டுக்கான NIRFஎனும் தேசிய கல்வி நிறுவன கட்டமைப்பு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் இந்திய அளவில் 9 வது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி பெற்றுள்ளது.
கலை அறிவியல் கல்லூரிகளின் இந்த இடத்தை இக்கல்லூரி பெற்றுள்ள நிலையில்,இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் கல்லூரியின் சேர்பெர்சன் நந்தினி, மற்றும் கல்லூரி முதல்வர் ஹாரத்தி ஆகியோர் பேசினர்.
இந்த தருணம் எங்களுக்கு பெருமைமிகு தருணம் என்றும் கல்லூரி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் இணைந்து தான் இதனை பெறுவதற்கு உறுதுணையாக இருந்ததாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நாங்கள் முன்னேறி உள்ளதாகவும் கடந்த ஆறு ஆண்டுகளாக முதல் 10 இடங்களுக்குள் வருவதாகவும் தெரிவித்தார். இது கல்லூரியில் அனைவரும் இணைந்து பணியாற்றியதால் கிடைத்தது என தெரிவித்தார்.
இதற்கு எங்களுடைய பாடத்திட்டமும் முக்கிய பங்கு என்றும் எங்களுடைய பாடத்திட்டங்கள் அனைத்தும் தொழில் துறையுடன் இணைந்து இருப்பதால் மாணவிகளின் கல்விக்கு பெரும் உதவியாக இருப்பதாக தெரிவித்தார்.மேலும் பெண்கள் Empower தான் எங்களுக்கு முக்கியம் என்றும் தெரிவித்தார்.
மேலும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்திருப்பதால் எங்கள் மாணவிகளும் அங்கு சென்று அங்கு இருக்கக்கூடிய கல்வி பற்றி தெரிந்து கொள்கிறார்கள் என தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது,கல்லூரி இயக்குனர் கலைசெல்வன்,ஜி.ஆர்.ஜி.இயக்குனர் சதாசிவம்,NIRF ஒருங்கிணைப்பாளர் ராஜ ராஜேஸ்வரி,செயலாளர் யசோதா தேவி,டீன் வசந்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.