February 27, 2018
தண்டோரா குழு
சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா? ஐ.நா.வுக்கு கண் இல்லையா? என நடிகர் விவேக் கூறியுள்ளார்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் கடந்த ஒருவாரமாக சிரிய – ரஷ்ய கூட்டுப் படைகள் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.இதில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. பலரும் சிரியா அரசுக்கு எதிராக தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விவேக்கும் சிரியா குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா? ஐ.நா வுக்கு கண் இல்லையா?இதை விவாதிக்க சர்வ தேச நீதி அமைப்புகளுக்கு வாய் இல்லையா? இந்தக் கொடுமை தீர வழி இல்லையா? அன்று ஶ்ரீலங்கா இன்று சிரியா! ஆக,யாருக்குமே இதயம் இல்லையா?இவ்வாறு அவர் கூறியுள்ளார்.