February 27, 2018
தண்டோரா குழு
சிரியாவில் நடைபெற்று வரும் போரினால் பல குழந்தைகளும் பெண்களும் உயிரிழந்து வருவதால் உடனடியாக அங்கு நடைபெறும் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி கோவை வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிரியாவின் கிழக்கு கூட்டாவில் சண்டை நிறுத்தத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு விடுத்த பிறகும் அங்கு இரண்டாவது நாளாக தொடர்ந்து வான் தாக்குதல்கள் தீவிரமாக நடத்தப்பட்டன. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
மேலும்,இதுவரை இறந்தவர்களில் 60 சதவிகிதம் பேர் குழந்தைகள்.அதேபோல் காயம் அடைந்ததும் குழந்தைகளே. இந்த தாக்குதலை தடுக்க ஐ நா நடவடிக்கை எடுக்க கோரியும், சிரிய அரசு போரை நிறுத்த கொள்ள வேண்டியும் கோவை நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு, சிரியா அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.