April 17, 2021
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையுடன் சேர்ந்து சமூகக் கருத்துக்களையும் தொடர்ந்து பேசிவந்தவர் நடிகர் விவேக்(59).அதனால் ‘சின்னக் கலைவாணர்’ என்ற பெயரையும் பெற்றார்.
இந்நிலையில்,திடீர் மாரடைப்பால் நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் விவேக் கடந்து வந்த பாதை :
1987-ம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார்.2000-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டில் மட்டும் 50-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர்.இதுவரை 2020-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.2009-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்.5 முறை தமிழக அரசின் நகைச்சுவை நடிகருக்கான மாநில விருதினை பெற்றுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த நடிகர் விவேக், மாணவர்களைத் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சமூகப் பணியாற்றி வந்தார்.