August 20, 2025
தண்டோரா குழு
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் குறைந்த கட்டணத் துணை நிறுவனமான ஸ்கூட் தாய்லாந்தில் உள்ள சியாங்ராய் மற்றும் ஜப்பானில் உள்ள ஒகினாவா மற்றும் டோக்கியோ (ஹனேடா) ஆகிய இடங்களுக்குப் புதிய விமான சேவைகளை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த விமான சேவை டிசம்பர் 2025 மற்றும் மார்ச் 2026 க்கு இடையில் படிப்படியாக தொடங்கப்படும். இது ஆண்டு இறுதி மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கால பயணங்களை திட்டமிடுபவர்களுக்குக் கூடுதல் விருப்ப தேர்வுகளை வழங்குகிறது. மலைப்பிரதேசத்தின் கம்பீரத்துக்கும் அமைதியான சூழ்நிலைக்கும் தாய்லாந்தின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள சியாங்ராய் புகழ் பெற்றது.
ஸ்கூட் ஜனவரி 1, 2026 அன்று சியாங்ராய்க்கு வாரத்திற்கு ஐந்து முறை எம்ப்ரேயர் E190-E2 விமான சேவையை தொடங்கும்.ஜப்பானின் துணை வெப்ப மண்டல சொர்க்கமான ஒகினாவா அதன் அழகிய கடற்கரைகள், தெளிவான நீர்நிலைகள் மற்றும் தனித்துவமான ரியூக்யு பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற தீவுகளின் கூட்டமாகும். யுனெஸ்கோவின் கலாச்சார மற்றும் இயற்கை உலக பாரம்பரியத்தளங்களுக்கு தாயகமான ஒகினாவா வளமான நில வரலாற்றிலும் இயற்கை அழகிலும் மூழ்கும் அனுபவத்தை வழங்குகிறது.
டோக்கியோவிற்கும் (ஹனெடா) ஸ்கூட் தன் சேவைகளை தொடங்கும். பயணிகள் ஜப்பானின் பரபரப்பான தலைநகரை அணுக இது வசதியான மாற்று வழியை வழங்குகிறது. ஒகினாவாவிற்கு வாரந்தோறும் மூன்று முறை ஏர்பஸ் A320 வகை விமானச் சேவை டிசம்பர் 15, 2025 அன்று தொடங்கும். அதே நேரத்தில் டோக்கியோவுக்கு (ஹனெடா) போயிங் 787 ட்ரீம்லைனர்கள் தினசரி சேவைமார்ச் 1, 2026 அன்றுதொடங்கும்.
டோக்கியோ (ஹனெடா) மற்றும் ஒகினாவாவிற்கு ஒரு வழி எக்கனாமிக் வகுப்புக்கட்டணம்[1] INR17,500 இல் இருந்து தொடங்குகிறது.மேலும் சியாங்ராய்க்கு INR10,500 இல் இருந்து தொடங்குகிறது. சிங்கப்பூர் வழியாகக் கிடைக்கும் தடையற்ற சேவைகள் மூலம் இந்தியப்பயணிகள் இப்போது ஸ்கூட்டில் இந்த இடங்களுக்கு செல்லலாம்.இன்று முதல் புதிய விமானங்களுக்கு ஸ்கூட்டின் வலைத்தளம், மொபைல் செயலி மற்றும் படிப்படியாக பிற சேனல்கள் மூலம் முன்பதிவு செய்யலாம்.
சியாங்ராய், ஒகினாவாமற்றும்டோக்கியோ (ஹனெடா) ஆகிய இடங்களுக்கு சேவைகளை தொடங்குவதன் மூலம் தாய்லாந்திற்கு வாராந்திரம் 111 விமானங்களையும், ஜப்பானுக்கு வாராந்திரம் 45 விமானங்களையும் ஸ்கூட் இயக்கும். அதன் நெட்வொர்க்கில் புதிய சேர்க்கைளுடன், விமான நிறுவனம் ஆசிய-பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் உள்ள 18 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 76 இடங்களுக்கு (சிங்கப்பூர்உட்பட) விமானங்களை இயக்கும். தென்கிழக்கு ஆசியாவில், ஆகஸ்ட் 2025 முதல் பாங்காக்கிற்கான விமானப் போக்குவராத்து வாரத்திற்கு 35 முதல் 39 மடங்கு அதிகரித்தன.
நவம்பர் 2025 முதல் ஈப்போவில் வாரத்திற்கு 17 முதல் 21 மடங்கு சேவைகள் அதிகரிக்கும். சியாங்மாய் விமானங்களின் போக்குவரத்து டிசம்பர் 2025 ஆம் ஆண்டிற்குள் வாரத்திற்கு ஏழு மடங்கு என்ற நிலையில் இருந்து வாரத்திற்கு 14 மடங்காகஅதிகரிக்கும்.வட ஆசியாவில் டோக்கியோ (நரிட்டா) (தைபே வழியாக) செல்லும் சேவைகள் அக்டோபர் 2025 முதல் வாரத்திற்கு 12 முறையில் இருந்து படிப்படியாக 14 முறையாக அதிகரிக்கும்.
சப்போரோவுக்கான சேவை (ஹொக்கைடோ) (தைபேவழியாக) டிசம்பர் 2025 முதல் வாரத்திற்கு நான்கு முறையில் இருந்து ஏழுமுறையாக அதிகரிக்கும். அதற்கேற்ப, சிங்கப்பூர் மற்றும் தைபே இடையிலான சேவைகள் அக்டோபர் 2025 முதல் படிப்படியாக 23 முதல் 25 மடங்காகவும், டிசம்பர் 2025 முதல் 25 முதல் 28 மடங்காகவும் அதிகரிக்கும். கூடுதலாக, ஜெஜுவுக்கான விமானங்கள் ஜனவரி 2026 முதல் வாரத்திற்கு ஐந்து முதல் ஏழு மடங்காகஅதிகரிக்கும்.
ஐரோப்பாவில், வியன்னாவுக்கான சேவைகள் மார்ச் 2026 முதல் வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை வரைஅதிகரிக்கும்.