• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்லாவில் உதான் திட்டத்தை தொடங்கி வைத்தார் நரேந்திர மோடி

April 27, 2017 தண்டோரா குழு

சிறிய நகரங்களுக்கு இடையில் விமான சேவையை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட உதான் திட்டத்தை பிரதமர் மோடி சிம்லாவில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

இமாசல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் சிம்லாவிலிருந்து டெல்லிக்கு முதல் விமானப் பயணத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.அவர் சிம்லாவுக்கு செல்வது இதுவே முதல்முறை.

இத்திட்டத்தின் கீழ் 5௦௦ கிலோமீட்டர் தொலைவுக்கு உட்பட்ட விமான பயணங்களுக்கு 2,5௦௦ ரூபாய் வசூலிக்கப்படும். வரி மற்றும் சேவை கட்டணம் இல்லை. சிம்லாவிலிருந்து புதுதில்லிக்கு இயங்கவிருக்கும் ஏர் இந்திய நிறுவனத்தின் கிளை நிறுவனமான அலையன்ஸ் ஏர் விமான சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த விமானத்திற்கான கட்டணம் 2,3௦6 ஆகும்.

உதான் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் பேசுகையில்,

“இந்தியாவில் ஹவாய் காலணிகளை அணியும் எளிய மக்கள் விமானத்தில் பயணிப்பதை பார்க்க விரும்புகிறேன்”

மேலும், உதான் திட்டத்தை பயன்ப்படுத்தி நீண்ட பயணம் மேற்கொள்பவர்களுக்கு விமான கட்டணம் அதிகமாக இருக்கும். இத்திட்டத்திற்கு கீழ், நாடெங்கும் உள்ள 7௦ விமான நிலையங்களுக்கு இடையே ஸ்பைஸ் ஜெட்,ஏர் ஒடிஷா,ஏர் டெக்கான்,ஏர் இந்தியா துணை நிறுவனமான விமான சேவைகள்
டர்போ மேகா ஆகிய 5 விமான நிறுவங்கள் சேவை செய்யும்.

5௦,௦௦௦ முதல் 1 லட்சம் மக்கள் தொகையை கொண்ட பிராந்திய நகரங்களில் இருந்து மெட்ரோ நகரங்களுக்கு இடையே இணைப்பை மேம்படுத்த 44 விமான நிலையங்களை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க