• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிமெண்ட் விலை உயர்வால் 30% கட்டுமான பணிகள் தேங்கியுள்ளது – கட்டுநர் வல்லுநர் சங்கம்

April 27, 2019 தண்டோரா குழு

சிமெண்ட் விலை உயர்வால் முப்பது சதவீத் கட்டுமான பணிகள் தேங்கியுள்ளதாக கட்டுநர் வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட கட்டுநர் வல்லுநர் சங்கத்தினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.இதில் வரும் 28ம் தேதி புதிய நிர்வாகிகள் பதிவியேற்பு விழா கொடிசியா வர்த்தக வளாகத்தில் பதிவி ஏற்க உள்ளதாகவும் இவ்விழாவில் மத்திய அரசில் பணியாற்றி வரும் விஞ்ஞானி டாக்டர்.முரளிமோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.

இதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் அவர்கள் கூறுகையில்,

அனைவருக்கும் வீடு என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 18% இருந்த ஜி.எஸ்.டி 1000 சதுர அடி பரப்பளவு உள்ள வீடுகளுக்கு ஒரு சதவீதமாகவும் அதற்கு மேல் உள்ள வீடுகளுக்கு ஐந்து சதவீதமாக குறைக்கபட்டதால் கட்டுமான பணி தலை நிமிர்ந்து உள்ளதாக தெரிவித்தனர்.மேலும் ஒப்பந்த பணிகளுக்கு 18% இருந்ததை 12% குறைத்துள்ளனர் இதனை இன்னும் நான்கு சதவீதம் குறைக்கபட்டால் தொழில் வளர்ச்சி அடையும் என தெரிவித்தனர். பெரும்பாலான கட்டுமான பணிகளுக்கு உரிமம் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கபடுவதாக கூறியவர்கள் உரிமம் பெற காலதாமதமாகிறது. இதனை நடைமுறைபடுத்த ஒற்றை சாரள முறையில் அனைத்தும் பதிவேற்றம் செய்யபடும் பட்சத்தில் எளிதல் பணிகள் மேற்கொள்ளபட்டு நிறைவு செய்யபடும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தங்களையும் இணைக்க வேண்டும். இந்த திட்டம் பரவலாக்க பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.கட்டுமான பணியில் சிமெண்ட் விலை உயர்வால் முப்பது சதவீத பணிகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக நாற்பது சதவீத கட்டுமான பணிகள் நிலுவையில் உள்ளதாக கூறியவர்கள் அரசு சார்பில் வழங்கபட்டு வந்த சிமெண்ட் பத்து சதவீதம் மட்டுமே வழங்கபட்டு வருவதால் அது போதுமானதாக இல்லை இதனை அரசு நடைமுறை படுத்த வேண்டும் என்றனர்.

மேலும் சிமெண்ட்டுக்கு மாற்றாக எம்.சாண்ட் அதிகளவில் பயன்படுத்தபட்டு வருவதாகவும் மூன்றில் ஒரு பங்கு விலை குறைவாக உள்ளதாகவும் இது குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என தெரிவித்தனர்

பத்திரிக்கையாளர் சந்திப்பில் புதிதாக பதிவி ஏற்க உள்ள கட்டுநர் வல்லுநர் சங்க தலைவர் சிவராஜன்,துனை தலைவர் பன்னீர்செல்வம்,செயலாளர் சரவணன்,பொருளாளர் லக்ஷ்மணன்,இணை செயலாளர் கனேஷ்குமார் தற்போதய தலைவர் சின்னசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க