• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

May 28, 2018 தண்டோரா குழு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கு இணையதளங்களில் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் கட்டாய பொதுத்தேர்வாக நடத்தப்படவில்லை.ஆனால் இந்த முதல் நடைமுறையை நீக்கி சிபிஎஸ்இ 10ம் தேர்வுகள் கட்டாய பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10ம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச்-5ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ல் முடிவடைந்தன.10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும் என மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் www.cbse.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று மதிப்பெண்களை பெறலாம். இதுதவிர cbse.examresults.net , results.nic.in/index , cbseresults.nic.in, results.gov.in போன்ற வலைதளங்கள் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை பெறலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் படிக்க