• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சின்னவேடம்பட்டி மாநகராட்சி நடுநிலை பள்ளியில் ‘கலைஞரின் வரும் முன் காப்போம்’ திட்டம் துவக்கம்

October 12, 2021 தண்டோரா குழு

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை ‘கலைஞரின் வரும் முன் காப்போம்’ என்ற திட்டத்தை மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்த முன்வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் ஊரக பகுதியில் 36 முகாம்களும், மாநகராட்சியில் 4 முகாம்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருவருடத்திற்கு 1250 முகாம்கள் என்ற இலக்கில் நடைமுறை படுத்த உத்தேசித்துள்ள இத்திட்டம் அந்தந்த பகுதிகளில் குறிப்பிட்ட நாட்களில் காலை 9 மணி துவங்கி மாலை 4 மணி முடிய செயல்படுத்தப்படும். இத்திட்டம் கோவை மாநகராட்சியில் இன்று சின்னவேடம்பட்டி மாநகராட்சி நடுநிலை பள்ளியில் துவங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் போன்ற பத்து வகையான சிறப்பு மருத்துவர்களால் நோயைக் கண்டறிந்து அதற்கான முதல் சிகிச்சைகளும் செய்யப்படும்.

இலவசமாக இரத்த பரிசோதனை, ஸ்கேன், இ.சி.ஜி மற்றும் எக்கொ பரிசோதனைகளும் செய்யப்படும். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் முகாமிலேயே முதல் சிகிச்சையும் இலவசமாக மருந்துகளும் வழங்கப்படும். மேற்பரிந்துரை தொடர் சிகிச்சை தேவைப்படின், நோயின் தன்மையைப் பொறுத்து முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் மூலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மக்கள் பரிந்துரை செய்யப்படுவர்.

இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க