• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

December 10, 2020 தண்டோரா குழு

நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் சித்ரா. பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள இவர், சரவணன் மீனாட்சி என்ற தொடரில்முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமடைந்தார்.கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஜனவரி மாதத்தில் திருமணம் நடைபெறவிருந்தது.

இதற்கிடையில், சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகை சித்ரா, நேற்று அதிகாலையில் தற்கொலை செய்துகொண்டார்.சித்ராவின் மறைவு செய்தி கேட்ட ரசிகர்களும் திரை நட்சத்திரங்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூறாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்
நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சித்ராவினது கன்னத்தின் தாடைப்பகுதியில் இருந்த காயங்கள் எதனால் ஏற்பட்டது. அவரது நகக்கீரலா,அல்லது வேறு ஒருவரால் ஏற்படுத்தப்பட்டதா என்பது பிரேதப்பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தெரியவரும்.

மேலும் படிக்க