• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சினிமா நண்பர்கள் என் நட்பை கைவிட மாட்டார்கள் – சுசித்ரா

April 28, 2017 தண்டோரா குழு

சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா தற்போது அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் சமூகவலைதளங்களையே கலக்கியவர் பின்னணிப் பாடகியான சுசித்ரா. அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தனுஷ், டிடி, ஹன்சிகா, த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ராணா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது சினிமா பிரபலங்கள் மத்தியிலும் பேசப்பட்டது.

இதற்கிடையில், சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை என்றும், அவருடைய டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாகவும் சுசியின் கணவர் கார்த்திக் கூறினார். ஆனால், அதனை மறுத்த சுசி என்னுடைய டுவிட்டர் கணக்கை யாரும் ஹேக் செய்யவில்லை என்று தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவரது அவரது டுவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுசித்ரா கூறுகையில்,

தனக்கு மனநிலை சரியில்லாமல் போனது உண்மைதான். அதற்கு தான் தற்போது அமெரிக்காவில் இருக்கும் என்னுடைய சகோதரி வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். இதன் காரணமாக என்னுடைய மனநிலை கொஞ்சம் தேறி வருகிறது. டுவிட்டரில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் பிரபலங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள்.

அவர்கள் அடைந்துள்ள மன உளைச்சலுக்கு நான் மனம் வருந்துகிறேன். அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

மேலும், என்னை அறியாமல் செய்த தவறுக்கு சினிமா நண்பர்கள் தன் நட்பை கைவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க