• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் ரஜினியுடன் வேறுபடுகிறேன்   –  கமல்ஹாசன்

March 17, 2018 தண்டோரா குழு

சினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுபடுகிறேன்’ என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினியும் கமல்ஹாசனும் தற்போது அரசியலுக்கு வந்துள்ளனர். இதனால் இருவரும் இணைந்து செயல்படுவார்களா என்ற கேள்வி அவ்வபோது எழுந்து வருகிறது.

இதுகுறித்து ஆங்கில  நாளிதழ் ஒன்றிக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், 

ரஜினியின் அரசியலுக்கும் என் அரசியலுக்கும் வேறுபாடு தவிர்க்க முடியாதது. எனக்கு எந்த மதமும் கிடையாது. அனைத்து மதங்களையும் நான் சமமாக மதிக்கிறேன். திரைப்படங்களில் தனியாக செயல்பட்டது போல் அரசியலிலும் செயல்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “பல விஷயங்களில் ரஜினி கருத்து கூறாமல் இருப்பதற்காக அவரை கண்டிப்பது சரியல்ல  என்றும் தெரிவித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க