• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் அமைச்சர் உறுதி – விஷால் நன்றி

April 2, 2018 தண்டோரா குழு

டிஜிட்டல் நிறுவனங்கள் சேவை கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் செய்வதால் கடந்த ஒரு மாதமாக புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை!

படப்பிடிப்பு உட்பட சினிமா சம்பந்தமான எந்த வேலையும் நடைபெறவில்லை! வெளியூர்களிலும்,வெளிநாடுகளிலும் படப்பிடிப்புகளை நடத்தவும் தடை விதித்து உள்ளனர்.இதனால் தமிழ் சினிமாத்துறையே ஸ்தம்பித்து உள்ளது.

இந்தப் பிரச்னைகளை அரசாங்கம் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும். சினிமாத்துறைக்கென தனி வாரியம் அமைத்து, அதில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர்கள், தொழிலாளர்கள் என எல்லாத் துறையைச் சார்ந்தவர்களும் இருக்க வேண்டும்.யாருக்கும் பிரச்னை வராமல் இந்தத் தொழிலை நடத்த அரசாங்கம் வழி செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த திரைத்துறை சார்பாகக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு,

“சினிமாத் துறைக்கென தனி வாரியம் அமைப்பட்டும். திரைத்துறை தொடர்பான பிரச்னைகள் முதலமைச்சர் பழனிசாமியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து,நடிகர் சங்கச் செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.திரைத்துறை வைத்திருக்கும் மற்ற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க