April 13, 2020
தண்டோரா குழு
சித்திரை கனியை முன்னிட்டு பழங்கள் வாங்க உக்கடத்தில் குவியும் பொதுமக்கள் விலை கடுமையாக உயர்ந்ததால் ஏமாற்றமடைந்தனர்.
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு சித்திரை கனியாக தமிழகத்திலும், மலையாள மக்கள் விசுவாகவும் கொண்டாடி வருகின்றனர். இந்த இரு பண்டிகைகளை முன்னிட்டு பொதுமக்கள் வழங்கமாக பூக்கள் மற்றும் கனிகளை வாங்குவது வழங்கம்.தற்போது கொரோனா அச்சம் காரணமாக பூ மார்க்கெட் முழுமையாக அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் பழவகைகள் வாங்க உக்கடம் மாநகராட்சி பழமுதிர்ச்சோலைகளுக்கு பொதுமக்கள் அதிகளவு வருகை தருகின்றனர்.ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பழங்களில் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மறு புறத்தில் அதிக விற்பனையாகும் இந்த சீசன் வேலையில் பூக்கடை வியாபாரிகள், வியாபாரிகள் மிகபெரிய இழப்பை சந்தித்துள்ளனர்.அதேபோல் ஒரு மணி நேரம் மட்டுமே பழக்கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் கடுமையான வியாபார இழப்பு ஏற்பட்டுள்ளதாக பழ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.