• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிட்டகாங் பல்கலைக்கழகம் பிரணாப் முகர்ஜிக்கு டாக்டர் பட்டம் அளித்தது

January 17, 2018 தண்டோரா குழு

வங்க தேசத்தின் சிட்டாகாங் பல்கலைக்கழகத்தில் நேற்று (ஜனவரி 16) நடந்த பட்டமளிப்பு விழாவில், இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

வங்க தேசத்தில் உள்ள சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று(ஜனவரி 16) நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி,  சிட்டகாங்கிற்கு சென்றுள்ளார். அந்த விழாவின் போது, பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் இப்திகர் உதின் சௌத்ரி, பிரணாப் முகர்ஜிக்கு  Doctors of Letters (D Litt.) பட்டத்தை வழங்கினார்.

சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஷிரின் அக்தர், பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் டாக்டர் கம்ருல் ஹூடா ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை மாலைநடந்த மற்றொரு விழாவில், சிட்டகாங் சிட்டி கார்ப்பரேஷன்(CCC) ‘City Key’ என்னும் கவுரவ விருதை, சிட்டகாங் நகரின் மேயர் ஏ.ஜே.எம். நசீர் உதின் பிரணாப்முகர்ஜிக்கு  வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க