• Download mobile app
18 Jun 2024, TuesdayEdition - 3051
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிங்காநல்லூர் காவல்துறையின் மனிதநேயம்

March 30, 2020 தண்டோரா குழு

சிங்காநல்லூர் காவல் நிலையம் அருகே நேற்று 9மாத நிறைமாத கர்ப்பிணி பெண் மயங்கி விழுந்த அடுத்து அப்பெண்ணை மீட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

கோவை சிங்காநல்லூர் அருகே நேற்று மாலை சுமார் நான்கு மணி அளவில் நடக்க முடியாமல் நிறைமாத கர்ப்பிணி பெண்ணும்
அவரது கணவரும் நடந்து வந்தனர்.
அப்போது திடீரென்று நிறைமாத கர்ப்பிணி பெண் மயங்கி விழுந்தார். அப்பொழுது வெளியே காவலுக்கு நின்றுகொண்டிருந்த சிங்காநல்லூர் தலைமை காவலர் புனிதவதி மற்றும் சிறப்பு போலீசார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் ஓடிச்சென்று அந்த அந்தப் பெண்ணுக்கு முதலுதவி அளித்து அவர்களை விசாரித்த பொழுது பல்லடம் அருகே உள்ள கொடுமுடியை சேர்ந்த தம்பதிகள் என்று தெரியவந்தது

அந்தப் பெண்ணின் பெயர் மஞ்சுளா வயது 28 அவரது கணவர் பெயர் விக்னேஸ்வரன் என்பது தெரியவந்தது. இவர்கள் கூலி வேலை செய்பவர்கள்,தற்போது அரசு மருத்துவமனைக்கு உடல் நல பரிசோதனைக்காக கடந்த வாரம் வந்தவர்கள் பஸ் போக்குவரத்து பிரச்சனையால் ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கிவிட்டனர். தற்போது ஆஸ்பத்திரியில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ல் யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் திருச்சி சாலையில் நடந்து வந்துள்ளது தெரியவந்தது.

அப்போது சிக்னல் அருகே வரும்பொழுது தலை சுற்றி கீழே விழுந்ததாக கூறினார்கள், இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் ஆய்வாளர் முனீஸ்வரனுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவரின் பரிந்துரையின்பேரில் ஆத்மா அறக்கட்டளை நிறுவன நிறுவனர் வந்தவர்களிடம் தொடர்புகொண்டு கர்ப்பிணிப் பெண்ணையும் அவரது கணவரையும் அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுமாறு கூறினார். இதையடுத்து,ஆத்மா அறக்கட்டளையின் சார்பாக அவர்கள் சொந்த ஊரான கொடுமுடிக்கு இலவசமாக சென்று விடப்பட்டது.

மேலும் படிக்க