March 3, 2020
தண்டோரா குழு
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் அமைப்பினர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
கோவை விமான நிலையம் வந்த முதல்வர் பழனிசாமியிடம் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் அமைப்பினர் என்பிஆர், என்ஆர்சி-யை அமல்படுத்த மாட்டோம் என தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி மனு அளித்தனர்.
என்.பி.ஆர். என்.ஆர்.சி -ஐ இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்கள் அமல்படுத்த மாட்டோம் என முடிவெடுத்தை போல தாங்களும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.தேசிய மக்கள் தொகை கணக்கெடிப்புபதிவேடு என்.பி.ஆர்-ல் கடந்த 2010-ன் போது உள்ள அம்சங்களே 2020-ல் கணக்கெடுப்பின் போது தொடரவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் ஜப்பார்,
என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை அமல்படுத்துவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அச்சத்தை முதல்வரிடம் தெரிவித்தோம். கோரிக்கையை படித்து பார்த்த முதல்வர் , சிறுபான்மை மக்களை ஒரு போதும் இந்த அரசு பாதிக்க விடாது.பல பேர் பலவிதமாக இது குறித்து பேசி வருகின்றனர். உண்மை நிலை மெதுவாக தெரியவரும் என இது தொடர்பாக முதல்வர் தெளிவுபடுத்தி உள்ளார்.வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்டங்கள் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.