April 19, 2018
தண்டோரா குழு
சென்னை சூப்பா் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டியை காண ஆயிரக்கணக்கான சென்னை சூப்பா் கிங்ஸ் ரசிகா்கள் சிறப்பு ரயில் மூலம் இன்று(ஏப் 19)காலை புனே புறப்பட்டனா்.
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு தமிழகத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் அனைத்தும் புனேவிற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில்,புனேவில் நாளை நடக்கும் ராஜஸ்தான்-சென்னை அணி போட்டியை பார்க்க ஆயிரக்கணக்கான சென்னை சூப்பா் கிங்ஸ் ரசிகா்கள் சிறப்பு ரயிலில் புறப்பட்டனர்.இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை அணி ரசிகர்கள் மன்றம் ஏற்பாடு செய்தனர்.