February 6, 2018
தண்டோரா குழு
கோவையில் சாலை ஓர வியபாரிகளுக்கு விரைவில் அனுமதி சான்றிதழ் வழங்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கோவையில் சாலை ஒர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் கணபதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று(பிப் 6) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து தமிழ்நாடு சாலை ஓர திருவிழா வியாபாரிகள் சங்கம் தலைவர் தேவராஜ் கூறுகையில்
“திருவிழா காலங்களில் உணவு உட்பட பல்வேறு பொருட்களை தற்காலிக கடைகளை அமைத்து விற்பனை செய்யும் போது உள்ள அரசு நெருக்கடிகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்து உள்ளோம்.அதன்படி உணவு தர சான்றிதழ் உட்பட அரசின் அனுமதி எளிமையாக கிடைக்க வழி காணவேண்டிய தீர்மானம் இயற்றியுள்ளோம்”.என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை தாங்கி பேசிய உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை விரைவில் சிறப்பு முகாம் அமைத்து அங்கீகார சான்றிதழ்கள் வழங்கிறோம் என உறுதியளித்துள்ளார்.