• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலை வசதி இல்லாத இடத்தில் தனது சொந்த நிலத்தை சாலை அமைக்க தானமாக வழங்கிய தொழிலதிபர்

September 7, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 95 வது பகுதியில் போத்தனூர் நியூயார்க் அவென்யூ பகுதியில் பிரதான சாலை குறிப்பட்ட தூரத்திற்கு நிறைவு பெற்று சாலை வசதி இல்லாமல் இருந்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வசித்து வந்த நிலையில், தனியார் இடமாக இருந்ததால்,அதன் பிறகு உள்ள பகுதிகளுக்கு சாலை இல்லாத நிலை ஏற்பட்டது.இதனால் அந்த பகுதி மக்கள் சுமார் 25 ஆண்டுகளாக சாலை வசதி அமைத்து தர பல்வேறு அரசியல் கட்சியினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து கேள்விபட்ட தனியார் இடத்தின் உரிமையாளரும் பிரபல 10 ஆம் நம்பர் குழுமத்தின் நிர்வாக இயக்குனருமான அப்துல் ரஷீத் சாலை அமைக்க போதுமான இடத்தை தானமாக வழங்க முன்வருவதாக அறிவித்து அதன் படி தானமாகவும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சுமார் 30 அடி அகலமும் 200 அடி நீளமும் கொண்ட சுமார் 15 செண்ட் இடத்தை சாலை அமைக்க இலவசமாக இடத்தை வழங்கிய தொழிலதிபர் அப்துல் ரஷீதிற்கு பாராட்டு விழா நடத்திய நியூயார்க் அவென்யூ குடியுருப்பு நல சங்கத்தினர் அவருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 95 வது மாமன்ற உறுப்பினர் அப்துல் காதர் மாநகராட்சி சார்பாக அவருக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.. ஒரு அடி இடம் வழங்க கூட தயங்கும் இந்த நவீன யுகத்தில் பொதுமக்களின் வசதிக்கு தாமே முன்வந்து தானமாக தமது நிலத்தை வழங்கிய அப்துல் ரஷீதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க