• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலை செப்பனிட காலதாமதம் ஆனால் மாநகராட்சி செப்பனிட்டு கட்டணம் சூயஸ் ஒப்பந்ததாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும்

January 10, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் 24 மணி நேர குடிநீர் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தக்குமார் தலைமையில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலையில் நடைபெற்றது.

கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தற்போது குழாய் அமைத்தல் பணி நிறைவுற்ற இடங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கும் பணி மற்றும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சாலைகளில் குழாய் பதிக்கும் பணி நிறைவு பெற்ற பின்னர் ஒரு சில இடங்களில் செப்பனிட காலதாமதம் ஏற்படுகின்றன.

அந்த இடத்தை உடரையாக செப்பனிட்டு வழங்க சூயஸ் நிறுவனத்திற்கு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் செப்பனிட காலதாமதம் செய்யப்படுமாயின் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தார்சாலையை செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சாலை செப்பனிடவதற்கான கட்டணத்தை சூயஸ் ஒப்பந்ததாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும். 15 நாட்களுக்கு ஒருமுறை சூயஸ் நிறுவனத்தின் பணிகள் குறித்த திட்டமிடுதலை சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் மூலம் கவுன்சிலருக்கு தெரிவித்து பணி செய்ய வேண்டும். குடிநீர் தொட்டி கட்டுதல் பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். தற்போது பணி செய்யக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்தி பணியை விரைவுபடுத்த வேண்டும்.

பொதுமக்களின் நலன் கருதி மேலும் சிறப்பு முனைப்புடன் 24 மணி நேர குடிநீர் திட்ட ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ள வேண்டும். குடிநீர் திட்டப்பணிகளை கவுன்சிலர்களுடன் ஆலோசித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் துணை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர் ஷர்மிளா, மண்டல தலைவர்கள் கதிர்வேல் (வடக்கு), மீனா லோகு (மத்தியம்), இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் (கிழக்கு), தெய்வயானை தமிழ்மறை (மேற்கு) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க