சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் தொழில் மேம்பாட்டுக்காக வங்கிக்கடன் வழங்கும் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் தினசரி சந்தை, வாரச்சந்தை, பூங்கா, ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோயில்களின் சுற்றுப்பகுதி மற்றும் கடை வீதி பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கென பிரத்யேகமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் முதற்கட்டமாக வங்கிகள் மூலம் மாதத்தவணை ரூ.946 வீதம் 12 மாதங்களுக்கு திரும்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது வரை 7,910 சாலையோர வியாபாரிகள் பயன்பெற்றுள்ளனர்.
தகுதியுள்ள நபர்கள் தங்களது ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் மூலமாக பயன் பெறலாம்.
வார நாட்களில் திட்டத்துக்கான ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரம் என்பவரை 99449 48878 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம். ஏற்கெனவே ரூ.10 ஆயிரம் கடன் பெற்று முறையாக திரும்ப செலுத்தி முடித்தவர்களுக்கு, இரண்டாம் கட்டமாக ரூ.20 ஆயிரம் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது