June 7, 2018
மஞ்சு தாமோதரன்
மாடு,குதிரை,கழுதை போன்ற விலங்குகளை கடினமான பொருட்களை சுமக்கவும் வருமானம் ஈட்டுவதற்கும் அதன் உரிமையாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.ஆனால் வேலை வாங்கிக்கொண்டு அவைகளுக்கு உணவு கொடுக்காமல் சாலையோரங்களில் விடப்படுகிறது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் காவல்துறையிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தான் இன்றும் உள்ளது.
இதுகுறித்த சமூக ஆர்வலர் மனோஜ் கூறுகையில்,
“குதிரைகளை வேலைக்காக பயன்படுத்திக் கொண்டு அவைகளுக்கு உணவு அளிக்காமல் அவிழ்த்து விடுகின்றனர்.இதனால் குதிரைகளும் மாடுகளும் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.குதிரைகள் மட்டுமின்றி மாடுகளும் இதைபோன்று தான் நடத்தப்படுகின்றது.அவைகளுக்கு உணவு அளிக்காத காரணத்தால் உணவைத் தேடி சுற்றித் திரிகின்றன.இதனால் பொதுமக்களுக்கும் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு ஆபத்தாக உள்ளது.இது தொடர்பாக காவல்துறை அதன் காப்பாளர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இதுபோல் தெருக்களில் சுற்றித் திரியும் விலங்குகளை காப்பதற்காக ஜீவகாருண்யம் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.சாலை ஓரங்களில் திரியும் விலங்குகளை தொண்டு நிறுவனத்தில் சேர்ப்பதன் மூலம் சாலை ஓரங்களில் ஏற்படும் விபத்துகளை விலங்குகள் இறப்பதையும் தடுக்க முடியும்.இது தொடர்பாக காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்”.
இது குறித்து மாணவி தேவ சவுந்தர்யா கூறுகையில்,
“நாய்களை காப்பதற்காக ஒரு அமைப்பு இருப்பது போன்று தெருக்களில் திரியும் விலங்குகளை காப்பதற்கும் ஒரு அமைப்பு வேண்டும்.இதுபோல் தேவைக்காக மட்டும் பயன்படுத்தி விடுவதற்குப் பதிலாக அதை பயன்படுத்தாமலே இருக்கலாம்.மேலும் இது தொடர்பாக விலங்குகள் நல ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று கூறினார் .
விலங்குகளை துன்புறுத்துவதும் அவைகளை வேலை வாங்கி உணவு கொடுக்காமல் சாலை ஓரங்களில் விட்டுவிடுவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.இது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா.????