• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலைப்பணியாளர்கள் இரவில் சமைத்து போராட்டம்

January 25, 2020 தண்டோரா குழு

நெடுஞ்சாலை துறை கோவை மாவட்ட கண்காணிப்பு பொறியாளரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து கோவையில் வெள்ளியன்று ஊழியர்கள் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் கீழ் கோவை வட்ட நெடுஞ்சாலைத்துறை செயல்படுகிறது. இங்குள்ள கோட்டப்பொறியாளர் தொடர்ந்து ஊழியர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். சட்டத்திற்கு புறம்பாக ஊழியகளின் ஊதியத்தை பிடிப்பது, சட்டப்படியான பலன்களை தர மறுப்பது, திட்டமிட்டே சாலைப்பணியாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பல முறை தொழிற்சங்கங்கள் புகார் தெரிவித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனைத்தொடர்ந்து சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.திருச்சிசாலை கோவை வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்று அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர். அதிகாரிகள் பேசணுவார்த்தைக்கு அழைக்காத நிலையில் ஊழியர்கள் இரவில் பொறியாளர் அலுவலகம் முன்பு சமைத்து தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க