June 18, 2021
தண்டோரா குழு
சாரமேடு பகுதியில் தமுமுக சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மூலிகை டீ வழங்கப்பட்டது.
கோவை வடக்கு மாவட்டம் – கிழக்கு பகுதிக்குட்பட்ட 75வது வாா்டு கிளை மற்றும் மாவட்ட இளைஞா் அணி இணைந்து பொதுமக்களுக்கு மூலிகை டீ, முககவசம் மற்றும் கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்வு தமுமுக-மமக கிளை தலைவா் சிக்கந்தா் தலைமையிலும் மாவட்ட இளைஞரணி செயலாளா் மைதீன் முன்னிலையிலும் நடைபெற்றது.
வாா்டிற்குட்பட்ட பகுதிகளில் வீடு விடாக கபசுர குடிநீா் வழங்கும் திட்டத்தை தமுமுக-மமக மாவட்ட தலைவா் இ.அஹமது கபீா் துவக்கி வைத்தாா். இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளா் முஜிபுா் ரஹ்மான், மாவட்ட துணை தலைவா் சிராஜ்தீன், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆஷிக் அஹமது, SMI மாநில துணை செயலாளா் கோவை அம்ஜத், மமக மாவட்ட துணை செயலாளா் பஷீா், தமுமுக மாவட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினா் கவிஞா் ஹக், கிழக்கு பகுதி மமக செயலாளா் ரபீக், கிளை நிா்வாகிகள் சிங்கம் இப்ராஹிம், சலீம், அக்பா் அலி, ஷெரீப், சதாம், நாசா் உள்ளிட்டடோா் கலந்து கொண்டனா்.
இதில் மூலிகை டீ 600 பேருக்கும், கபசுர குடிநீா் 1500 பேருக்கும் வழங்கப்பட்டது.