March 31, 2020
தண்டோரா குழு
சாய்பாபா காலனி புது பஸ் ஸ்டாண்டில் இயங்கிவந்த அண்ணா மார்க்கெட் சமூக இடைவெளியை சரியான முறையில் கடைபிடிக்காத காரணத்தால் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கொரொனோ எதிரொலி காரணமாக மார்க்கெட்களில் கூட்டம் அதிகமாக கூடக்கூடாது என்பதற்காக பேருந்து நிலையங்களில் காய்கறி மார்க்கெட் கடந்த ஞாயிறு முதல் செயல்பட தொடங்கியது. இதனையடுத்து உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி விற்பனை சந்தைகள் அதிகப்படுத்தப்பட்டன.மக்கள் அதிகமாக கூடாமல் இருக்க சமூக இடைவெளி விட்டு காய்கறிகளை வாங்கிச்செல்ல காவல் துறையினர் கட்டங்கள் வரைந்தனர்.
ஒரு நாள் மட்டும் சமூக இடைவெளியை கடைபிடித்த மக்கள் தற்போது நெருக்கமாக வந்து காய்கறி கடைகளை முற்றுகையிட தொடங்கியதால், மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக சாய்பாபா காலனியில் செயல்பட்டு வந்த அண்ணா மார்க்கெட்டை மூடி சீல் வைத்தது. இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்க வில்லை என்றால் பாதிப்பு அனைவருக்கும்தான் என்பதை எப்போது உணர்வார்கள்.