February 12, 2021
தண்டோரா குழு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். வழக்கம் போல் இன்று பணியில் தொழிலாளர்கள் பணியாற்றி க்கொண்டிருந்த போது, திடிரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கு பட்டாசுகளுக்கிடையே ஏற்பட்ட உராய்வே காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மோடி.