• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாதி பெயரை சொல்லி திட்டிய தலைமையாசிரியரை பணி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெற்றோர்கள் மனு

June 24, 2019 தண்டோரா குழு

அரசு பள்ளியில் மாணவர்களை சாதி பெயரை சொல்லி திட்டியும் , பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தும் தலைமையாசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெற்றோர்கள் மனு அளித்தனர்.

சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு கந்தசாமி நகரில் மாநகராட்சி ஆரம்பபள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் லட்சுமணன் என்பவரின் மகள் திவ்யபாரதி நான்காம் வகுப்பும், மகன் பூபதி மூன்றாம் வகுப்பும், அம்ஸ் கண்ணன் என்பவரின் மகள் வெண்ணிலா நான்காம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி பள்ளியில் இருந்த போது பள்ளியின் தலைமையாசிரியை ஜெயந்தி மாணவ மாணவிகளை சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், பிரம்பால் அடித்ததில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறி பெற்றோர்கள் தலைமையாசிரியரை கண்டித்து அன்றே பள்ளியை முற்றுகையிட்டனர்.

அப்போது தங்களது குழந்தைகளை தாழ்ந்த சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய தலைமையாசிரியர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் தலைமையாசிரியர் ஜெயந்தி தாழ்ந்த சாதியில் பிறந்தால் எங்கு நல்ல குணம் வரும், நல்ல சாதியில் பிறந்து இருந்தால், நல்ல குணம் வரும் என சாதிய ரீதியாக பேசியதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். மேலும் தன்னுடைய கணவர் உயர்ந்த அதிகாரியிடம் வேலை செய்து வருவதால் ஒன்றும் செய்ய முடியாது என பெற்றோர்களை மிரட்டியுள்ளதாக தெரிகிறது. மேலும் தலைமையாசிரியரின் சாதிய வெறியால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பயப்படுவதாக கூறினர்.சாதிய ரீதியாக செயல்படும் தலைமையாசிரியர் ஜெயந்தி மீது துறை ரீதியாகவும், வேறு இடத்திற்கு பணி மாறுதல் கொடுக்காமல் , பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து பெற்றோர்கள் கூறும்போது,

இந்த ஆரம்பபள்ளியின் தலைமையாசிரியை இதேபோல தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்தப்பள்ளியில் சேர்க்காமல் சரவணம்பட்டியில் உள்ள பள்ளியில் சென்று சேர்த்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் பள்ளி தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் அவர் கூறினார். ஏற்கனவே பெற்றோர்கள் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேசனிலும் வட்டார கல்வி அதிகாரியிடமும் புகார் அளித்து குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க